புதுதில்லி:
இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறைகள் என்று கூறப்படும் 8 தொழிற்துறைகளின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் ஒட்டுமொத்தமாக சரிவைக் கண்டுள் ளது. இவற்றின் வளர்ச்சி 5.8 சதவிகிதமாக குறைந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி-யில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. 4.5 சதவிகிதமாக ஜிடிபி சரிந்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவுஆகும். இதற்கு, வங்கிகளில் கையிருப்பு இல்லை, கடன்கள் திரும்பவரவில்லை, மோசமான பொருளாதார கொள்கைகள், தவறான தாராளமயமாக்கல் என்று நிறைய காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில்,உள்கட்டமைப்புத் துறைகள் என்றுகூறப்படும் 8 முக்கிய தொழிற்துறைகளின் வளர்ச்சி குறைந்ததும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.இந்த 8 தொழிற்துறைகளின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் 2-ஆவதுகாலாண்டில் 5.8 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று மத்திய அரசுஅறிவித்துள்ளது. முக்கியமாக எரிபொருள் மற்றும் சக்தித் துறையில்தான் சரிவு அதிகமாக ஏற்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தித் துறையில் வளர்ச்சி விகிதம் 17.6 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. அதேபோல கச்சா எண்ணெய் துறையில் 5.1 சதவிகிதம், இயற்கை எரிவாயு துறையில் 5.7 சதவிகிதம் என வளர்ச்சி குறைந்துள்ளது. சிமெண்ட் உற்பத்தியில் 7.7 சதவிகிதம்; ஸ்டீல் உற்பத்தியில் 1.6 சதவிகிதம் என வளர்ச்சி குறைந்துள்ளது.2018 முதலே இந்த துறைகளின் வளர்ச்சி சரிந்து வருகிறது என்றாலும், தற்போது இது மோசமான நிலையை அடைந்துள்ளது. மின்சார உற்பத்தி 12.4 சதவிகிதம் குறைந்துள்ளது. ஜூலைமுதல் செப்டம்பர் வரையிலான 2-ஆவதுகாலாண்டில் வளர்ச்சி அடைந்த ஒரே துறை, உர உற்பத்தி மற்றும் விற்பனைத் துறைதான். இது இந்த காலாண்டில் 11.8 சதவிகிதம் அது வளர்ந் துள்ளது.