புதுதில்லி:
1955-ஆம் ஆண்டின் இந்துத் திருமணச் சட்டப் பிரிவின் கீழ், தன்பாலினத்திருமணங்களை அங்கீகரிக்க முடியாதுஎன்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் வசிக் கும் எல்ஜிபிடி ( Lesbian, Gay, Bisexual,and Transgender - LGBT) சமூகத்தைச்சேர்ந்த அபிஜித் ஐயர் மித்ரா, கீதாதடானி, மதுரையில் வசிக்கும் கோபிசங்கர், ஊர்வசி ஆகியோர் தொடர்ந்த வழக்கு ஒன்று, தில்லி உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்களன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர், “அரசியல் சட்டப் பிரிவு 377ன் கீழ் தன் பாலின உறவைக் குற்றமாகக் கருதுவதை ரத்து செய்து, கடந்த2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின்அரசியல் சாசன அமர்வு முக்கியத்துவம்வாய்ந்த தீர்ப்பை வழங்கி விட்டது. ஆனாலும், தன்பாலின திருமண பதிவுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது சமத் துவம் மற்றும் வாழ்க்கைக்கான உரிமையை மீறுவதாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.இந்நிலையில், அரசுத் தரப்பில் ஆஜராகி பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “தன்பாலினத் திருமணங்களை அங்கீகரிப்பது, தற்போதைய சட்ட விதி நடைமுறைகளுக்கு எதிரானதாக அமைந்து விடும்” என்று தெரிவித்தார்.
நமது சட்டம், சமூக அமைப்பு மற்றும்மாண்புகள் ஒரே பாலின உறவு திருமணங்களை அங்கீகரிக்க வில்லை, இந்து திருமணச் சட்டத்தின் கீழ், தம்பதியினர் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும். தன்பாலின திருமணங்களில் ஆண், பெண் பாத்திரங்களை வகிப்பது யார்? குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் 7 ஆண்டுகள் வரை, பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அந்தச் சட்டத்தை எப்படி பொருத்துவது? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
மேலும், ‘தன்பாலின உறவு குற்றமாகாது’ என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தாலும், அதற்கு மேல் திருமணம் உள்ளிட்டவை குறித்து வேறெதும் தீர்ப்பில் இல்லை என்றும் துஷார் மேத்தா வாதாடினார்.இருதரப்பு வாதங்களை கேட்டறிந்தநீதிபதிகள் வழக்கை அக்டோபர் 21-ஆம்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.