புதுதில்லி:
உலக நாடுகளில் அதிகம் சொத்து படைத்த பணக்காரர்கள்குறித்த ஆய்வறிக்கையை ‘நைட் பிராங்க்’ (Knight Frank) என்ற லண்டனைச் சேர்ந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதில், 30 மில்லியன் டாலருக்கு மேல் (சுமார் ரூ. 215கோடிக்கு அதிகமாக) சொத்துமதிப்பு கொண்ட பணக்காரர்கள்,இந்தியாவில் 5 ஆயிரத்து 986 பேர் இருப்பதாக கூறியுள்ளது.அதிக சொத்து கொண்ட பணக் காரர்களின் எண்ணிக்கையில் சர்வதேச அளவில் இந்தியா 12-ஆவது இருப்பதாகவும், இன்னும் ஐந்து ஆண்டுகளில் 73 சதவிகித வளர்ச்சியுடன், இந் நிய பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 354 ஆக உயரும் என்றும் ‘நைட்பிராங்க்’ அமைப்பு கூறியுள்ளது.
அமெரிக்கா எப்போதும் போல இப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் 30 மில்லியன் டாலருக்குமேல் சொத்து படைத்த பணக்காரர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது.சீனாவில் மொத்தம் 61 ஆயிரத்து 587 பேர் பெரும் பணக்காரர்களாக இருக்கின்றனர்.2019-ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 31 ஆயிரம் பணக்காரர்கள் இந்தப்பட்டியலில் தங்களை இணைத் துக்கொண்டுள்ளனர். இதன் மூலம்ஒட்டுமொத்த பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து13 ஆயிரத்து 200 ஆக உயர்ந் துள்ளது.
2024ஆம் ஆண்டில் ஆசியாதான் உலகிலேயே அதிக பெரும்பணக்காரர்களைக் கொண்டமையமாகத் திகழும். ஐரோப்பாவைப் பின்னுக்குத் தள்ளி 44 சதவிகித வளர்ச்சியுடன் ஆசியா முன் னிலை பெறும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.