உலகிலேயே பெரிய அளவில் வேலை வாய்ப்பு அளிக்கும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் ஐக்கிய கூட்டணி ஆட்சி 2005-ல் நாடாளுமன்றத்தில் பல நாட்கள் இடது சாரிகள் விவாதித்து ஏழை மக்கள்வாழ்வாதாரத்தை பாதுகாக்க அமலுக்கு கொண்டு வரப்பட்டது.தமிழகத்தில் 2.2.2006-ல் முதன்முதலில் சிவகங்கை, விழுப்புரம், நாகை, திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் அமலாக்கப்பட்டது. அதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் முதன் முதலில் ஆங்கிலத்தில் உள்ள சட்ட உத்தரவு காப்பியை தமிழில் வெளியிட்டார் என்பது சிறப்பானது. அதற்கு காரணம் மறைந்த நமது தோழர் கோ.வீரையன் அவர்களே.மேலும் விரிவடைந்து 1.4.2007-ல் 10 மாவட்டங்களும் 1.4.2008-ல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டிற்கு வந்தது. 100 நாள்வேலை ஏழைகளுக்கு இறைக்கும் ஊற்றானது. வேலை ஸ்தலத்தில் நிழல்பந்தல், குடிதண்ணீர், குழந்தைகளை பராமரிக்க தனி ஆள் போன்ற சலுகைகள் இருந்தும்நடைமுறையில்இல்லை. ஆனால் இச்சலுகைகள் இடது சாரி அமைப்புகள் வலுவாக உள்ள இடங்களில் அமல்படுத்த முடிந்தது. இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் 100 நாள் வேலை பற்றி பேசுகிறவர்களின் கட்சிகள் எங்காவது, என்றைக்காவது 100 நாள் வேலையில் உள்ள முரண்பாடுகளை போக்க இயக்கங்கள் நடத்தியது உண்டா? ஆனால் இப்போது ஓட்டு வாங்க வேண்டுமென்று 100 நாள் வேலைபற்றி பேசுகிறார்கள் நாக்கூசாமல்.100 நாள் வேலைக்கான சட்டம் இருந்தாலும் மோடியும் எடப்பாடியும் முழுமையாக அமல்படுத்த முடியாது என அடம்பிடித்தவர்கள்தான் மதுரையிலும் கோவையிலும் மற்றும் 38 தொகுதியிலும் 100 நாள் வேலைக்கு கட்டியம் கட்டுவோம் என்று கூறுகிறார்கள்.
ஆனால் சமீபத்திய பட்ஜெட் தாக்கலில் சொற்பம் ரூபாய் 600 கோடி ஒதுக்கினார்கள். இதிலும் ஊரகவேலைத்திட்டத்தில் தளவாட பொருட்கள்வாங்கிக்கொள்ள 59 சதமான நிதியை செலவு செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். தில்லி உச்சநீதிமன்றமே ஆதார் அட்டை தேவையில்லை என மோடி தலையில் குட்டி உரக்க தீர்ப்பு சொல்லியும் அடம்பிடித்து நாடு முழுமையும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதன் விளைவு 100 நாள் வேலை திட்டத்தில் செய்த வேலைக்கு பணம் வங்கிக் கணக்கில் போடும் திட்டத்தால் தஞ்சாவூர் ஒன்றியத்தில் உள்ள ஒருவருடைய பணம் நாகை மாவட்டம் வேதாரணியம் பகுதியில் உள்ள ஒருவர் கணக்கில் 6 மாத காலமாக வேலையின் கூலிபணம் சேர்ந்து விட்டது. தனக்கு சம்பளம் வராததால் வங்கிக்கு தினந்தோறும் சென்றுவந்த வயதான அம்மா, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சையில் இயக்கம் நடந்தபோது அங்கு வந்து தனது நிலையை கூறினார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட பொழுது ஆதார் எண் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இது போன்று தமிழகம் முழுமையும் ஏழைகள், பாமர மக்கள் எண்ணிலடங்கா அளவில் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.தமிழகத்தில் வறட்சி பாதித்த மாவட்டங்களில் 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தவும் கூலியை 400ரூபாயாக உயர்த்தி கொடுக்கவும் வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
ஆனால் 150 நாள் வேலை,224 ரூபாய் கூலி என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு மோ(ச)டி அடிமை எடப்பாடி ஆட்சியில்எங்காவது முழுமையாக அமல்படுத்தப்பட்டது என்று சொல்ல முடியுமா? 2019 -ல் 100 நாள் வேலை ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பார்த்த வேலையோ சொற்பம். அதுவும் 15அல்லது 20 நாட்கள்தான். அதற்கும் கூடமூன்று மாதமாகியும் கூலி கிடைக்கவில்லை. இந்த லட்சணத்தில் தூய்மைஇந்தியா என்ற திட்டத்திற்கு உரிய நிதியை ஏப்பம் விட்டுட்டு அந்த வேலைசெய்யும் தூய்மை பணியாளர்களுக்கு 100 நாள் வேலை நிதியிலிருந்து எடுத்து சம்பளம் போடும் கேடுகெட்ட மோடி, எடப்பாடி கூட்டம் 100 நாள் வேலை பற்றி பேச அருகதை உண்டா?இடது சாரிகளால் வந்த 100நாள் வேலைத்திட்டம் இன்று ஊத்தி முடிடும் நிலையில் உள்ளது. வேலை நாளை அதிகரிக்கவும் ஊதியத்தை உயர்த்தவும் குரல் கொடுக்க மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் தோழர் சு.வெங்கடேசன், கோவை நாடாளுமன்ற வேட்பாளர் தோழர் ஆர்.நடராஜன் ஆகியோருக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்போம்!- தஞ்சை கா.அபிமன்னன்அ.இ.வி.தொ.ச. மாவட்ட துணைத் தலைவர்