விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து வியாழனன்று காலையில் ரசாயன வாயு கசிந்து வெளியேறியது. அதிகஅழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல மீட்டர் தொலைவுக்கு பரவியது. காற்றில் கலந்த விஷவாயுவால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவித்தனர்.சாலையில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர்மயங்கி விழுந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட் டோரை மருத்துவமனையில் சேர்த்தனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை உள்ளிட்ட 3 பேர் சிறிது நேரத்திலேயே மரணம்அடைந்தனர். அதன்பின்னர் 5 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதுவரை 12 பேர் பலியானதாகவும், 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆலையை சுற்றி 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள்வெளியேற்றப்பட்டனர்.
சிபிஎம் அதிர்ச்சி
விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு தொடர்பாக அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு, சம்பந்தப்பட்ட கம்பெனி நிர்வாகத்தின் பொறுப்பின்மைமுற்றிலும் கிரிமினல் தனமானது என்றும், விபத்து குறித்து புலன் விசாரணை நடத்திவிஷவாயு கசிவுக்கு காரணமான கயவர்களைதண்டிக்க வேண்டும், உயிரிழந்தோர் குடும் பத்திற்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் குறிப்பிட்டுள்ளது.