tamilnadu

img

மலர் கண்காட்சி

புதுச்சேரி அரசு வேளாண்துறை மற்றும் விவசாயிகள் நலத்துறை, தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் தைத் திருவிழா வெள்ளியன்று (பிப்.7) தொடங்கியது. இவ்விழாவை முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு மலர் கண்காட்சியை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், அரசு செயலர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் வண்ணமயமான மலர் செடிகள், காய்கறிகள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.