தில்லியில் வருமான வரி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தில்லியில் வருமான வரி துறை அலுவலகத்தில் விற்பனை வரி அலுவலக கட்டிடத்தின் 13வது தளத்தில் உள்ள அறை எண் 115ல் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அலுவலகத்தில் பணியில் இருந்தவர்கள் பதறியடித்து வெளியேறினர். இந்த தீவிபத்தில் நல்வாய்ப்பாக யாரும் காயம் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.