குலாம்நபி ஆசாத் பேட்டி
கவுகாத்தி, டிச.25- மக்கள் விரோத மசோதாக்களைக் கொண்டுவரும் ஒவ்வொரு முறையும் பாஜக வைத் தோற்கடித்து மக்கள் பதிலடி கொடுப்ப தாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில், குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களைச் சந்தித்துள் ளார். அப்போது, “மகாராஷ்டிரா மற்றும் ஹரி யானாவில் தேர்தல் வருவதற்கு சில நாட்க ளுக்கு முன்னதாக 370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்தனர். 370-க்கு எதிராக பிரதம ரும் முதலமைச்சர்களும் அமைச்சர்களும் நாடு முழுவதும் விளம்பரங்கள் செய்தனர். ஆனால், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களையும் அவர்கள் இழந்தனர். ஹரியானாவில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களைத் திரட்டி ஆட்சி அமைத்தாலும் அது தோல்விதான்” என்று தெரிவித்துள்ளார். தற்போது, “குடியுரிமைச் சட்டத் திருத் தம் மற்றும் என்.ஆர்.சி. கொண்டுவரப்பட்ட நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலிலும் தோல்வி அடைந் துள்ளனர்” என்று சுட்டிக்காட்டியுள்ள ஆசாத், “விரைவில் நடைபெறவுள்ள தில்லி, பீகார் தேர்தலிலும் அவர்கள் தோல்வி யடைவார்கள்; இதற்காகவே வேறு ஒரு மசோதாவை பாஜக கொண்டுவர வேண்டும். அப்போதுதான், நாங்கள் (எதிர்க்கட்சிகள்) இன்னும் இரண்டு மாநிலங்களில் வெற்றி பெற முடியும்” என்றும் கிண்டலாக குறிப்பிட் டுள்ளார்.