புதுதில்லி:
‘முகநூல் இந்தியா’வின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொதுக் கொள்கை இயக்குநர் அங்கிதாஸ் மற்றும் அந்நிறுவனத்தின் லாபியிஸ்ட் (பரப்புரையாளர்) ஷிவ்நாத் துக்ரால் ஆகியோர் இந்தியாவில் ஆளும்கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக, கடந்தவாரம் பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்தது.
அமெரிக்காவின் ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ மற்றும் ‘டைம்’பத்திரிகைகள் இதுதொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டதால், பாஜக - முகநூல் இடையிலான தொடர்பு குறித்து, நாடாளுமன்றக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றன. முகநூலின் ஒருபக்கச் சார்பு குறித்து,அந்நிறுவனத்திற்கு கடிதங்களையும் கட்சித் தலைவர்கள் எழுதினர்.இந்நிலையில், அவர் களுக்கு போட்டியாக, மத்தியதகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும் முகநூல் தலைமை நிர்வாகிமார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு (Mark Zuckerberg) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,முகநூல் நிறுவனம் பாஜகவினருக்கு எதிராகவும் சதி செய்வதாக கூறி சிரிப்பு காட்டியுள்ளார்.‘முகநூல் இந்தியா’ குழுவிலுள்ள மூத்த ஊழியர்கள், பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு எதிராக அவதூறான, உண்மைக்குப் புறம்பான தகவல்களை பதிவு செய்கின்றனர் என்றும், இவர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல்சித்தாந்தத்தை ஆதரிப்பவர் கள் என்ற தகவல் தனக்கு கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, டஜன் கணக்கான மின்னஞ்சல்களை ஏற்கெனவே அனுப்பியும் முகநூல் நிர்வாகம் இதுவரை தனக்குபதிலளிக்கவில்லை என்றும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள் ளார்.