tamilnadu

img

இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் கேள்விக்குறியாகும் 383 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை

கொல்லம்:
இஎஸ்ஐ சந்தாதாரர்களான தொழிலாளி களின் குழந்தைகள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான 20 சதவிகித ஒதுக்கீடு சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பால் கேள்விக்குறியாகி உள்ளது. அதன்படி இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் 383 இடங்களுக்கான அனுமதி தடைபட்டுள்ளது.  தீர்ப்பின் காரணமாக மருத்துவக் கல்லூரிமாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை மருத்துவ கவுன்சிலிங் குழு நிறுத்தி வைத்துள்ளது. கொல்லம் பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரி உட்பட நாட்டில் உள்ள ஒன்பது மருத்துவக் கல்லூரிகளில் இஎஸ்ஐ ஒதுக்கீட்டின்  அடிப்படை யிலான மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்கப்பட்டிருந்தது.

முந்திரி தொழிலாளர்கள் போன்றபொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் குழந்தைகளின் உயர்கல்வி வாய்ப்பு இந்த தீர்ப்பின் காரணமாக தடைபட்டுள்ளது. ஒதுக்கீ ட்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றதனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக இஎஸ்ஐ கார்ப்பரேசன் கூடுதல் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளது.இடஒதுக்கீடு உள்ளதால் தொழிலாளர்களின் குழந்தைகள் பலர் எம்பிபிஎஸ்
தேர்வுக்காக விண்ணப்பித்ததோடு வேறு படிப்புஎதற்கும் விண்ணப்பிக்கவில்லை. இவர்கள்  இஎஸ்ஐ அல்லாத அகில இந்திய ஒதுக்கீடு களுக்கும் இதர பல்கலைக் கழகங்களுக்கும் விண்ணப்பிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளனர். மருத்துவக் கல்லூரியில் அனுமதி கிடைக்கவில்லை என்றால் அது தங்களது எதிர்காலத்தை பாதிக்கும் என மாணவர்கள் கவலை தெரிவித்தனர். இஎஸ்ஐ கார்ப்பரேசன் தலைவர் ஜெய மோகனை மாணவர்கள் சந்தித்து இதில் தலையிட
வலியுறுத்தினர். இப்பிரச்சனையில் மாநிலஅரசு தலையிட முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.