டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பாலியல் குற்றவாளி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் ஆதரவாளர் கத்தியுடன் நுழைய முயன்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்து.
தலைநகர் தில்லியில் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் வந்துள்ளார். ரேம் ரஹீம் என்று கோஷம் எழுப்பியபடி அந்த நபர் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடமிருந்து கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட நபர் டெல்லி லக்ஷ்மி நகரில் வசிக்கும் சாகர் இன்ஸா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர் என்றும் தெரியவந்துள்ளது.