tamilnadu

img

பொருளாதார சரிவு எதிர்பார்த்ததுதான்... தலைமை பொருளாதார ஆலோசகர் சொல்கிறார்

புதுதில்லி:
வரலாறு காணாத வகையில் ஜிடிபி வீழ்ச்சியடைந்து இருந்தாலும் செப்டம்பர் காலாண்டில் நிலைமை சரியாகிவிடும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூத்தி வி. சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“23.9 சதவிகித பொருளாதார சரிவு எதிர்பார்த்த ஒன்றுதான். இந்தியாவில் நுகர்வு விகிதம் 27 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இது நிச்சயமாக ஜிடிபி-யில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். ஆனால், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதல் 10 ஓவர்களில் நிதானமாக விளையாடிவிட்டு அடுத்த 40 ஓவர்களில் மிகப் பெரிய அளவில் ரன்கள் குவிப்பதைப் போல கொரோனாலாக்டவுனால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளும்நிச்சயம் அடுத்த காலாண்டிற்குள் சீராகி விடும்.” இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.