அங்காரா
ஈரான் - துருக்கி எல்லைப்பகுதி கிராமமான ஹபாஷ் - இ - ஒலியாவில் இன்று காலை 9.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இருநாட்டு எல்லைப்பகுதி கிராமங்கள் பாதிக்கப்பட்டன. ஈராக் நாட்டின் எல்லைப்பகுதி கிராமங்களும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. நிலநடுக்கம் தொடர்பாக ஈரான் அரசு எவ்வித தகவலும் அளிக்கவில்லை என்றாலும், துருக்கி அரசு தரப்பில் நிலநடுக்கத்தால் 8 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துருக்கி உள்துறை மந்திரி சுலேமான் சோய்லு,"ஈரான் - துருக்கி எல்லைப்பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் 8 பேர் உயிரிழந்தனர். அவர்களில் மூன்று பேர் குழந்தைகள். 21-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். அதில் 8 பேர் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்"என்றார்.