tamilnadu

img

பசியில் மக்கள் அழுகும் தானியங்கள்

ரேசன் மூலம் விநியோகித்திடுக: ராம்விலாஸ் பஸ்வானுக்கு, பிருந்தா காரத் கடிதம்

புதுதில்லி, ஏப்.20- பொது விநியோக முறை மூலமாக, இந்திய உணவுக் கழகத்தின் தானியங்களை விடுவித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான பிருந்தா காரத் கோரியுள்ளார். இது தொடர்பாக, அவர் மத்திய நுகர்வு விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநி யோகத்துறை அமைச்சர், ராம் விலாஸ் பஸ்வானுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

மத்திய அரசின் சார்பில் தங்கள் அமைச்ச கம், இந்திய உணவுக் கழகத்தின் கிடங்கு களில் இருக்கின்ற அரிசி மற்றும் கோதுமை முதலானவற்றை, நிவாரண வேலைகளுக் காக, மின்னணு ஏலம் (E-auctions) வழி யில் இல்லாமல் அரசாங்கம் நிர்ணயித் துள்ள விலைக்கு நேரடியாக அரசு சாரா நிறுவனங்களுக்கு விற்பதற்கு அனுமதி அளித்திருப்பது சம்பந்தமாக இக்கடி தத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன். ஆயி னும் அரசு நிர்ணயித்திருக்கிற விலை என்ன என்பது பிஐபி வெளியிட்டுள்ள ஏப்ரல் 8 தேதியிட்ட அறிக்கையில் வெளிப்படுத்தப் படவில்லை. மேலும் அரசு சாரா நிறுவனங்க ளில் எவை எவை அதனை வாங்க அனுமதிக் கப்பட்டிருக்கிறது என்பதும் வெளிப்படுத் தப்படவில்லை. இப்போது, கோதுமைக்கு ஒரு கிலோ ரூ.21.50க்கும், அரிசி ரூ. 22.50க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கி றது. இந்த விலைகள் மிகவும் அதிகமாகும். அரசாங்கம் வெளியிட்டிருக்கிற திறந்த வெளிச் சந்தை விலைகள் இதை விடக் குறைவாகும்.

அரசாங்கம், ஏப்ரல் 7 அன்று, 54.2 மில்லி யன் டன் உணவு தானியங்கள் தேவைப்படும் இருப்பை விடக் கூடுதலாக இருப்பதாகக் கூறியிருந்தது. இதனை வணிகரீதியாக இ-ஏலத்தில் விற்பதற்கு அரசாங்கம் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்விகண்டு விட்டன. இப்போது இந்த தானியங்கள் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் அழுகி வீணாகிக் கொண்டிருக்கின்றன. அடுத்து கொள்முதல் செய்ய இருக்கிற கோதுமையை வைப்பதற்கு அரசாங்கத் திற்கு கிடங்கில் இடம் தேவை. எனவே இதனை அரசு சாரா நிறுவனங்களுக்கு அதிக விலையில் விற்பதற்கு அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. மிகவும் அறநெறி வழுவிய செயலுமாகும்.

நாட்டில் கோடிக் கணக்கான மக்கள் வேலையில்லாமல், வருமானம் இல்லா மல் வறுமையின் கோரப்பிடிக்கு ஆளாகி யிருக்கும் நிலையில், இதனை அம்மக்க ளுக்கு இலவசமாக வழங்கிட அரசாங்கம் முன்வர வேண்டும். நிவாரண வேலைக்கு அரசு சாரா நிறுவனங்களையும், தர்ம ஸ்தா பனங்களையும் அரசு பயன்படுத்த விரும்பு கிறது என்றால் நிச்சயமாக, அதன் நோக்கம் மக்களுக்கு உதவுவது அல்ல. 

இந்த தானியங்களை பொது விநியோக முறை மூலமாக இலவசமாக மக்களுக்கு விநியோகித்திட உணவு அமைச்சர் முன்வர வேண்டும் என்று வலுவாக வலியுறுத்து கிறேன். மேலும் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வந்துள்ள மக்களிடம் ஆதார் கார்டுகள், ரேஷன் கார்டு கள் போன்றவற்றை வற்புறுத்தாமல், உணவு தானியங்கள் கோரி வரும் அனைத்து ஏழை மக்களுக்கும் தானியங்களை அளித்திட  வேண்டும். சமூக முடக்கத்தின் சுமை, நாட் டின் கோடானுகோடி தொழிலாளர் வர்க்கங் களின் தோள்களில்தான் ஏற்றப்பட்டிருக்கி றது. இந்த எதார்த்த நிலைமைக்கேற்ப அர சின் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு பிருந்தா காரத் கடிதம் எழுதி யிருக்கிறார்.  

                (ந.நி.)