tamilnadu

img

நீட் தேர்வை  ஒத்திவைக்க  கோரிய மனு  தள்ளுபடி 

புதுதில்லி:
நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய ரிட் மனுக்களை உச்சநீதிமன்றம் புதனன்று தள்ளுபடி செய்தது.மருத்துவப் படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ நுழைவுத்தேர்வை நாடு முழுவதும் செப்டம்பர்  13 ஆம்  தேதி நடத்துவதற்கு தேசிய தேர்வுமுகமை ஏற்பாடுகள் செய்து வருகின்றது.ஆனால் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் மாணவர் களின் நலன் கருதி இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தினர். மேலும் இந்த தேர்வை நடத்துவதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  எனினும் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத் தில்  தொடரப்பட்ட வழக்குகள்தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று குறையாததால் நீட் தேர்வைஒத்திவைக்கக் கேட்டு 20 மாணவர்கள்  தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் புதனன்று  தள்ளுபடி செய்தது. இதனால் நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிகிறது.