மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ லட்சணம்
புதுதில்லி, நவ.20- ஜிஎஸ்டிஆர் 3பி மாதாந்திர கணக்கு தாக்கல் செய்வதற்கு நவம்பர் 20 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலை யில், அதற்கான இணையதளம் வேலை செய்யாததால் வர்த்தர்கள் பெரும் அலைக்கழிப்பைச் சந்தித்துள்ளனர். பலமுறை விவரங்களை பதிவிட்டு கணக்குகளைத் தாக்கல் செய்ய முற்பட்ட போதும் பலன் கிடைக்காததால், பெரும் துயரத்திற்கு ஆளான அவர்கள், ‘இதுதான் மோடி கூறும் ‘டிஜிட்டல் இந்தியா’வின் லட்சணமா?’ என்று டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆதங்கங்களை கொட்டித் தீர்த்து விட்டனர். சாதாரண படி வங்களை கூட தாக்கல் செய்ய முடியாத நிலையில்தான் ஜிஎஸ்டி இணையதளம் உள்ளது என்று சிலர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டேக் செய்தும், பலர் விமர் சனங்களை வைத்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரித்தாக்கலில் குளறுபடி கள் என்பது தொடர்கதையாகி விட்டது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்ய நவம்பர் 30-ஆம் கடைசி நாளாக இருந்தது. ஆனால் தாக்கல் செய்வதில் உள்ள பல்வேறு குளறுபடி கார ணமாக அது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப் பட்டது. அதேபோல 2019-20ஆம் நிதி ஆண்டுக்கான அறிக்கையை தாக்கல் செய்ய அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அவ காசம் அளிக்கப்பட்டது. வரி விதிப்பில் சமரச மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. தற்போது, ஜிஎஸ்டி மாதாந்திர கணக்கிற் கான ஜிஎஸ்டிஆர் 3பி படிவத் தாக்கலி லும் தற்போது குளறுபடி ஏற்பட்டுள்ளது.