tamilnadu

img

7 முறை பிளாஸ்மா தானம் செய்த தில்லி இளைஞர்... குவியும் பாராட்டு... 

தில்லி 
நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியின் ஜஹாங்கிர் பகுதியைச் சேர்ந்தவர் தப்ரேஸ் கான்(35). இவர் இந்தியாவில் கொரோனா எழுச்சி பெற்ற காலத்தில் அதாவது ஏப்ரல் மாதத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானர். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். 

பிளாஸ்மா தானம் பற்றிய விழிப்புணர்வை கண்டு வியந்த தப்ரேஸ் கான் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதன்முறையாக பிளாஸ்மா தானம் செய்தார். இவர் தான் தில்லி பகுதியின் முதல் பிளாஸ்மா கொடையாளர் (?) என கூறப்படுகிறது. 
தப்ரேஸ் கான் அதோடு விடவில்லை. இதுவரை தொடர்ந்து 7 முறை பிளாஸ்மா தானம் செய்து கொரோனா தடுப்பிற்கு முன்மாதிரியாக அசத்தியுள்ளார். இவரது செயலை நெட்டிசன்கள் மீம்ஸ் செய்து கொண்டாடி வருகின்றனர்.   

தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு செல்லவே பயப்படும் நிலையில், தனது உடல் நலனை பற்றி கண்டுகொள்ளாமல் 7 முறை பிளாஸ்மா தானம் செய்துள்ள தப்ரேஸ் காகானின் தைரியத்தை பலர் பாராட்டி வருகின்றனர்.