இஸ்லாமாபாத்
கடந்த 2-ஆம் தேதி ஏர் இந்தியா விமான நிறுவனம் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய இரண்டு விமானங்களை இயக்கியது. மும்பையிலிருந்து மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்ட இந்த விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்து, அந்நாட்டின் விமான கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு வான்வெளியில் பறக்க அனுமதி கேட்டது.
பாகிஸ்தானின் எல்லை நகரான கராச்சி கட்டுப்பாடு நிலையம்,"அஸ்ஸலாமு அலைக்கும்,ஏர் இந்தியா நிவாரண விமானத்தை கராச்சி கட்டுப்பாடு நிலையம் வரவேற்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் விமானத்தை இயக்குவது எங்களுக்கு பெருமையளிக்கிறது. எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என ஏர் இந்தியாவுக்குப் பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது.