tamilnadu

img

மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிரதமரின் முகவரியைக் கொடுங்கள்.. தில்லி ஆர்ப்பாட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் அதிரடி

புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தத் சட்டத் தைத் (சிஏஏ) தொடர்ந்து, தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) கொண்டுவர மோடி அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் என்ஆர்சி முடிவை ஒத்திவைத்த மோடி அரசு, அதனையே தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) என்ற புதிய பெயரில் அமல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்தது. சூழ்ச்சியைப் புரிந்துகொண்ட எதிர்க்கட்சிகள் இதற்கும் தங்களின் கடும்எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், தில்லியில் சிஏஏஎன்ஆர்சிக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடைபெற்றஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கும் சமூகசெயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அருந்ததி ராய்,தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து, அதிகாரிகள் விவரம் சேகரிக்க வரும்போது போலியான பெயர்மற்றும் முகவரியை கொடுக்குமாறு நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். “என்.பி.ஆர். எனப்படும் தேசியமக்கள் தொகைப் பதிவேடு என்.ஆர்.சி.க்கான தரவுத்தளமாக பயன் படுத்தப்படும் என்பதால், மக்கள் இதற்கு எதிராக போராட வேண்டும். அதற்காக திட்டம் தீட்டவேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ள அருந்ததிராய், “முகவரி என்று யாராவது கேட்டால் பிரதமர் மோடியின் ‘நம்பர் 7, ரேஸ் கோர்ஸ் ரோடு’ என்றமுகவரியைக் கொடுங்கள் என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும், “குடியுரிமைத் திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தலித் துக்கள், பழங்குடிகள் மற்றும் அனைத்து ஏழை மக்களுக்கும் எதிரானது” என்று கூறியுள்ள அருந்ததி ராய், “தன்னுடைய அரசாங்கம் தேசியக் குடிமக்கள் பதிவேடு குறித்தும், நாட்டில்  சிறை முகாம்கள் அமைப்பதுகுறித்தும் எதுவும் சொல்லவில்லை என்று பிரதமர் பொய்களை அள்ளிவீசியிருக்கிறார். இது வடிகட்டிய பொய்கள்என்று அவருக்குத் தெரியும் என்றாலும், நாட்டிலுள்ள பல ஊடகங்கள்அவரது பொய்களைக் கொண்டுசெல்வதற்குத் தயாராயிருப்பதால் அவர் அவ்வாறு அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.