புதுதில்லி:
தில்லி வன்முறையில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் வருத்தத்தை ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குடெரெஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் அவையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜரிக் கூறியிருப்பதாவது:தில்லியிலிருந்து வரும் உயிரிழப்பு செய்திகள், ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளருக்கு வருத்தத்தை அளித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், அதிகபட்ச கட்டுப்பாடு வேண்டும்என்றும், வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.மேலும், புதுதில்லியின் நிலைமையை குடெரெஸ் உன்னிப்பாக கவனித்து வருகிறார்; ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், பாதுகாப்புப் படையினர் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு ஸ்டீபன் டுஜரிக் குறிப்பிட்டுள்ளார்.