கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2019 நவம்பர் 23 அன்று இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது,வகுப்பு வாதத்தைத் தூண்டும் வகையில் பேசிய குற்றச்சாட்டில் முதல்வர் எடியூரப்பா மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்து, சம்மன் அனுப்ப, பெங்களூரு மாநகர காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.