tamilnadu

img

சேலத்தில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் கைது

சேலம், ஏப். 26-சேலம் மாநகர் பகுதியில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.சேலம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடப்பதை தடுக்க சேலம் மாநகர காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 35க்கும் மேற்பட்ட ரவுடிகளை சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர்கள் உதவியுடன் சேலம் மாநகர காவல் துறையினர் கைது செய்தனர்.குறிப்பாக கிச்சிப்பாளையம், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் பலரை காவல்துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.