tamilnadu

img

இந்தியாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 147 பேராக அதிகரிப்பு

புதுதில்லி:
இந்தியாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு புதனன்று உறுதி செய்யப்பட்டது.இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தோரின்எண்ணிக்கை 147 பேராக அதிகரித்துள்ளது. இதில் 122 பேர் இந்தியர்கள் என்றும், 25 பேர் வெளிநாட்டினர் என்றும் இதுவரை 14 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரங்களில், நாட்டிலேயே மிகவும் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 38 இந்தியர்கள், 3 வெளிநாட்டினர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இரண்டாவதாக  அதிகபட்ச எண்ணிக்கையாக கேரளாவில் 25 இந்தியர்கள் மற்றும் 2 வெளிநாட்டினரும், ஹரியானாவில் 2 இந்தியர்கள், 14 வெளிநாட்டினரும், உத்தரப் பிரதேசத்தில் 15 இந்தியர்கள், ஒரு வெளிநாட்டினரும், கர்நாடகாவில் 11 இந்தியர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த ஏற்கெனவே பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன்தொடர்ச்சியாக 15 அம்ச கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்துள்ளது.