ஆக்ரா
உத்தரபிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான ஆக்ராவில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. மேலும் கட்டுப்பாடு பகுதிகள் 70-யை தாண்டியுள்ள நிலையில், இதனால் தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளை மீண்டும் திறக்க மாவட்ட நீதிபதி பிரபு சிங் தடை விதித்துள்ளார். மேலும் மறு உத்தரவு வரும் வரை ஆக்ரா நகரின் சுற்றுலா தலங்களை திறக்க கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஜூலை 6 முதல் மத்திய தொல்லியல் துணை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில் மற்றும் சுற்றுலா தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.