tamilnadu

கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் புதுவை அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜூன் 28- கொரோனா தொற்று பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று  புதுச்சேரி  அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் பிரதேச செய லாளர் ஆர்.ராஜாங்கம் முதல்வர் நாராயண சாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:  கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்தி ருந்தால் தற்போதைய நிலைமையை தவிர்த்திருக்க முடியும். மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கும் மக்களுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பை ஏற்ப டுத்துவதில் மத்திய அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை.  3 மாத பொது முடக்கக் காலத்தில் தொற்றை எதிர் கொள்ளும் வகையில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை வலுப்ப டுத்துவதில் தேக்கம் உள்ளது. மத்திய அரசு  புதுச்சேரிக்கு பேரிடர் நிவாரணம் சிறப்பு நிதி  வழங்காதது மாநில மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.  

மாநில அரசு மருத்துவமனைக்குத் தேவை யான உபகரணங்களை வாங்க முயற்சி எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ராபிட் கிட்  மூலம் பரிசோதனைகள் நடைபெற்று வருகி றது. தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்துவது, தனியார் மருத்துவமனை களைப் பயன்படுத்துவது போன்ற நட வடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.  மேலும் சமூகத்தை அச்சுறுத்தும் நோய் எதிர்ப்பு போராட்டத்தோடு மக்களின் ஊட்டச்  சத்துக் குறைபாடுகளைப் போக்க உணவ ளிப்பது, உரிய நிவாரணம் அளிப்பது அவசி யம். இதுவும் நோய் எதிர்ப்பு போராட்டத்தின்  உள்ளார்ந்த அம்சம். எனவே வறுமை ஒழிப்பு திட்டத்திற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும்.

மாணவர்கள்
நோய்த்தொற்று தீவிரமாகியுள்ள நிலை யில் கல்வி நிறுவனங்களைத் திறக்க வாய்ப்  பில்லை. எனவே அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்க வேண்டும். இணைய வழி அல்லது மாற்றுக்  கல்விமுறை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்  கள், மாணவ அமைப்புகள், கல்வியாளர்க ளிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும்  பின்தங்கிய ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்கள் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஆகவே ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் சமைத்த உணவு வழங்க வேண்டும்.
மருத்துவர்களைப் பாதுகாக்க வேண்டும்
நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நல்ல உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவர்களை விடச் செவிலியர்கள் நோயாளிகளை நெருக்க மாக இருந்து கவனித்துக் கொள்ள வேண்டி யுள்ளது. இத்தகைய பணிச்சுமை, அவர்க ளின் குடும்பச் சூழல் போன்றவை ஒருவித மான மன அழுத்தத்தை அளிக்கிறது. அதி லிருந்து அவர்கள் விடுபடுவதற்கான வழி முறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.