tamilnadu

img

கொரோனா பாதிப்பு... ஆசிய அளவில் 5-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா  

தில்லி 
உலகின் மிகப்பெரிய கண்டமான ஆசியக் கண்டத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. ஆசியக் கண்டத்தில் இதுவரை 3 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்து 716 பேர் பலியாகியுள்ளனர். 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இந்தியா ஆசியக் கண்ட கொரோனா வரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

இந்தியாவில் இதுவரை 11 ஆயிரத்து 555 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 396 பேர் பலியாகியுள்ள நிலையில், விரைவில் இஸ்ரேலை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இஸ்ரேலில் இதுவரை 12 ஆயிரத்து 220 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 126 பேர் பலியாகியுள்ளனர். முதலிடத்தில் சீனா (பாதிப்பு - 82,296, பலி - 3,342) உள்ளது. அடுத்த 2 இடங்களில் ஈரான் மற்றும் துருக்கி உள்ளன. ஆசிய அளவில் கொரோனா பலி எண்ணிக்கையில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 4683 பேர் பலியாகியுள்ளனர். சீனா 2-வது இடத்திலும், துருக்கி 3-வது (1403) இடத்திலும் உள்ளது.