tamilnadu

img

காந்தி சிலை முன்பு ஆசியாவின் மிகப் பெரிய மதுக்கடை

பெங்களூரு:
ஆசியாவின் மிகப்பெரிய மதுபானக் கடை, பெங்களூருவிலுள்ள காந்தி சிலை அருகே அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மதுப்பழக்கத்தை கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா காந்தி.எனவேதான், ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தை ஒட்டியுள்ள காந்தி சிலை அருகில்தான் ஆசியாவிலேயே மிக பெரிய மதுபானக் கடை அமையவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது, அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. மதுக்கடை அமைய அனுமதி அளிக்கக் கூடாது என்று சமூக ஆர்வலரான கே.எல். சுரேஷ் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மது பாட்டிலில் கூலிங் கிளாசுடன் காந்தி இதனிடையே, இஸ்ரேல் நாட்டின் ‘மக்கா பிரேவரி’ என்ற மதுபான நிறுவனம், தனது ஒயின் பாட்டிலில் மகாத்மா காந்தி படத்தைஅச்சிட்டுள்ளது. அதில் கலர் டிசர்ட், ஓவர் கோட் அணிந்து, கூலிங் கிளாசுடன் இருப்பதுபோல காந்தியின் படம் அமைந்துள்ளது.