tamilnadu

img

அபிநந்தன் மீசையுடன் காங்கிரசாரை பார்க்க ஆசை!

ஜம்மு:
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்ற இந்திய ராணுவத்தின் விங் கமாண்டர் அபிநந்தன்,பாகிஸ்தான் ராணுவத்திடம் சிறைப்பட்டார். எனினும், ஓரிரு நாளில் அவரைப் பாகிஸ்தான் விடுவித்தது.

இந்த நிகழ்வுகளையொட்டி, விங் காமாண்டர் அபிநந்தன் இந்திய அளவில் பிரபலமானார். கூடவே அவரது முறுக்கு மீசையும் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஒருகட்டத்தில், அபிநந்தன் என்றாலே முறுக்கு
மீசைதான் முதலில் நினைவுக்கு வருவதாகமாறியது.இந்நிலையில், சில நாட்களுக்கு முன்புமக்களவையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, “அபிநந்தன் வர்த்தமானை மத்திய அரசு பெருமைப்படுத்த வேண்டும்; அதற்காக அவருடைய மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும்” என்று புதுவிதமான கோரிக்கை ஒன்றை வைத்தார்.காங்கிரஸ் கட்சித் தலைவரின் இந்த கோரிக்கை சமூகவலைத்தளங்களில் விவாதங்களைக் கிளப்பியது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, இதுதான் முக்கியமா? தேசப்பற்று விஷயத்தில் பாஜகவுக்கு நாங்கள் இளைத்தவர்கள் அல்ல என்று காட்டுவதற்கு அபிநந்தன் மீசைதான் காங்கிரசுக்கு கிடைத்ததா? என்று கேள்விகள் எழுந்தன.

அதன்தொடர்ச்சியாக ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லாவும், காங்கிரசை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவுக்கு தேசிய மீசை இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது” போலும் என்று கூறிவிட்டு, “காங்கிரஸ் கட்சியிலுள்ள எனது நண்பர்களை அபிநந்தன் மீசையுடன் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன்” என்றும் கலாய்த்துள்ளார்.