மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ஏனாம்
நகரத்தில் பழைய பேருந்து நிலையம், சாவித்திரி நகர், பீம்நகர் ஆகிய பகுதியில் வீதி வீதியாக சென்று கை சின்னத்தில் வாக்குகள் கோரினார். அவருடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஏனாம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் திறந்த வாகனத்தில் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.