புதுதில்லி:
பரிசோதனை முடிவுகள் தாமதத்தால் மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் அடுத்த நான்கு வாரங்களுக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில் தலைநகர் மும்பையில் உள்ள மிகப்பெரிய தனியார் ஆய்வகத்தில் இருந்து சோதனை முடிவுகள் வெளியாக மிகவும் தாமதமாகி உள்ளது. இதனால் நகர குடிமை அமைப்பான பிரஹன் மும்பை மாநகராட்சியில் இருந்து இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
சோதனை முடிவு அறிக்கை தாமதம் என்பது நோய் தொடர்பு கண்டுபிடிப்பதில் சிரமங்களுக்கு வழிவகுக்கிறது. மேலும் இது தாமதமான சிகிச்சைக்கு வழிவகுக்கும் மற்றும் சில சந்தர்ப்பங்களில், மரணத்திற்கு வழிவகுக்கும் என்று பிஎம்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வகம் தங்களுக்கு ஏற்பட்ட தாமதங்களை ஒப்புக் கொண்டுள்ளது, தங்கள் ஊழியர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள். தாமதமான அறிக்கைகளின் சதவீதம் மிகக் குறைவு என்றும் ஆய்வகம் கூறியது.