tamilnadu

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு தனியார்மயத்திற்கான சதியே!

புதுதில்லி, ஏப். 5-


பிஎஸ்என்எல் நிறுவனத்தில் எழுந்துள்ள பிரச்சனைக்கு ஊழியர் களுக்கு தன் விருப்ப ஓய்வு என்ற பெயரில்கட்டாய ஓய்வு கொடுப்பது தீர்வாகாதுஎன்றும், பிஎஸ்என்எல் நிறு வனத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்திடுவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகவே இதனை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது என்றும், இதனைத் தடுத்து நிறுத்திடுவோம் என்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் பொதுச்செயலாளர் பி. அபிமன்யு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இப்போது ஏற்பட்டுள்ள பிரச்ச னைக்கு ஊழியர்களின் எண்ணிக்கை காரணம் அல்ல. இதே நிறுவனம்தான் 2004-05இல் 10 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தை அரசுக்கு ஈட்டித்தந்தது. அப்போது நிறுவனத்தில் ஒரு லட் சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்தார்கள். எனவே உண்மையான காரணம் ஊழியர் எண்ணிக்கை அல்ல.உண்மையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 2014-15, 2015-16, 2016-17 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தொடர்ந்துலாபம் ஈட்டி வந்துள்ளது. 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப் பட்ட பின்னர்தான் பிரச்சனை ஆரம்பித்தது.



இதன் தில்லுமுல்லுகளை விமர்சித்த டெலிகாம் முன்னாள் செயலாளர் ஜே.எஸ். தீபக் உடனடி யாக அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப் பட்டார். மேலும் டிராய் குழுமமும் ஜியோவிற்கு பெரிய அளவில் உதவி இருக்கிறது.பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் அள விற்குத்தான் கடன் இருக்கிறது. டெலிகாம் கம்பெனிகளிலேயே மிகவும் குறைவான அள விற்குக் கடன் உள்ள நிறுவனம் பிஎஸ் என்எல் மட்டுமே. ஆனால் ஜியோ மற்றஅனைத்துக் கம்பெனிகளும் தலா 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக கடன்வைத்திருக்கின்றன. எனினும் அர சாங்கம், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மட்டும் வங்கிகளிடமிருந்து கடன்பெறு வதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.ஊழியர்களை, தன் விருப்ப ஓய்வுஎன்ற பெயரில் வீட்டிற்கு அனுப்புவது பிரச்சனைக்குத் தீர்வாகாது. இதே போன்று எம்டிஎன்எல் நிறுவனத்தில் இருமுறை செய்தார்கள். எனினும் அது தன் நெருக்கடியிலிருந்து இன்னமும் மீளவில்லை. உண்மையிலேயே பிஎஸ்என்எல் நிறுவனத்தின்மீது அரசாங்கத்திற்கு அக்கறை இருக்குமானால், 4ஜி அலைக்கற்றை வரிசையை உடனடியாக அதுஅளித்திட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை நவீனமயப்படுத்து வதற்கும், விரிவாக்குவதற்கும் கடன் அளித்து உதவிட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனம் தன்னிடம் காலியாக உள்ள இடங்களை இலாபகர மாக்கிட தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனுமதித்திட வேண்டும்.பிஎஸ்என்எல் நிறுவனத்தை எப்படியாவது தனியாருக்குத் தாரை வார்த்திட வேண்டும் என்பதே அர சாங்கத்தின் குறிக்கோள். இதன் ஒருபகுதியாக இதன் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்திட இப்போது அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.எனவே, அரசின் இந்நடவடிக்கையை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கடுமை யாக எதிர்க்கிறது. அரசின் இத்தகைய படுபோக்குத்தனமான நடவடிக்கைக்கு எதிராக அனைத்து சங்கங்களுடனும் கலந்துபேசி ஒன்றுபட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சிகளை சங்கம் மேற்கொள்ளும். (ந.நி.)