tamilnadu

img

புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்பு

புதுதில்லி:
‘புதிய கல்விக் கொள்கை’ தொடர் பாக, பொதுமக்களிடமிருந்து இதுவரை 65 ஆயிரம் பரிந்துரைகள் தங்களுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்கு, மத்திய அரசு கடந்த 2017-ஆம்ஆண்டு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவை அமைத்தது. இந்தக்குழு அண்மையில், ‘புதிய கல்விக் கொள்கை’ தொடர்பான தங்களின் வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்தித் திணிப்பு, பழைய குருகுல கல்வி முறையை கொண்டுவருவது; கல்வியை தனியார்மயமாக்குவது; ஏழை - எளிய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் தட்டிப் பறிக்கும்வகையில், அனைத்து உயர்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வைக் கட்டாயம் ஆக்குவது என்று மிக மோசமான பல பரிந்துரைகளை கஸ்தூரி ரங்கன் கமிட்டி வழங்கியுள்ளது.

இதற்கு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந் துள்ள நிலையில், ஜூலை 31 வரை பொதுமக்களின் கருத்துக்களை கேட்கிறோம் என்று நாடகம் ஒன்றை மோடி அரசு நடத்தி வருகிறது.இந்நிலையில்தான், மோடி அரசின்கருத்துக் கேட்பு எந்த நிலையில்இருக்கிறது என்று, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்தியமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், புதியதேசிய கல்விக்கொள்கை வரைவு
அறிக்கை தொடர்பாக, தனிநபர்கள்,நிறுவனங்கள், அமைப்புக்கள் உள் ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து இதுவரை 65 ஆயிரம் பரிந்துரைகள் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.