புதுதில்லி:
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான அனைத்து வழக்கு களையும் உச்சநீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்கவுள்ளதாக நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது. மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே எட்டு வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மொத்தம் 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.இத்திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும்
மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்தது. மேலும், இத்திட்டத்துக்காக கையகப் படுத்தப்பட்ட நிலங்களை எட்டு வாரங்களுக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது. இந்நிலையில், சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட தடைக்கு
எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு ஜூலை 31 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கப்படவில்லை. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட உள்ளன. அதனால் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்’ என்றார். நீதிபதிகள் கூறுகையில், ‘நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகள் தனி மனுவாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த தனி மனு அடிப்படையில் எவ்வித இறுதி உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. 8 வழிச்சாலை திட்டத்தில் பொதுநலன், மாநில நலன் ஆகியன பார்க்கப்பட வேண்டும். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் 130-க்கும் மேற்பட்ட மனுக்கள், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக நிலுவையில் உள்ளன. எனவே,உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் உள்ள அனைத்து மனுக்களையும் ஒன்றாகஇணைத்து, ஒரே மனுவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும். அதன் அடிப்ப டையில் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி இவ்வழக்கு விசாரித்து உத்தரவிடப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, ஈரோட்டைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் புதனன்று உச்சநீதிமன் றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்அந்த மனுவில், ஏற்கனவே உள்ள சென்னை - சேலம் சாலையை விரிவுபடுத்த லாம். அதைவிடுத்து புதியதாக எட்டு
வழிச்சாலை திட்டத்துக்காக கையகப் படுத்தும் நிலங்கள் பெரும்பாலும் விவசாய நிலங்களாக உள்ளன. எனவே, இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த புதிய மனு தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.