tamilnadu

img

கனடா குடியுரிமை பெற்ற அக்சய் குமாரை போர்க்கப்பலுக்குள் அனுமதித்தது எப்படி?

புதுதில்லி:

பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 

குறிப்பாக, “இந்தியாவின் ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பலில், தனது இத்தாலி நாட்டு உறவினர்களை ராஜீவ் காந்தி ஏற்றிச் சென்றார்” என்றும், “இதன்மூலம் ராஜீவ் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேலிக்குரியதாக ஆனது” என்றும் சாடினார்.


“கடந்த 1987-ம் ஆண்டில், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இந்திய விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ். விராட் கப்பலில் சுற்றுலா சென்றார். உடன் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் இருந்தனர். கப்பலைக் கடலில் நிறுத்தி விட்டு கடற்படை ஹெலிகாப்டரில் லட்சத் தீவுக்குச் சென்று 10 நாள்கள்

கழித்தனர். 


இவ்வாறு கடற்படை கப்பலை சுற்றுலா செல்ல பயன்படுத்திய சம்பவம் எங்காவது நிகழ்ந்தது உண்டா? ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா வழியிலான இத்தாலி உறவினர்களும் ஐ.என்.எஸ் விராட்டில் பயணம் செய்தனர். வெளிநாட்டினர் நம் நாட்டு போர்க்கப்பலில் பயணிப்பது நாட்டு பாதுகாப்புக்கு உகந்ததா, ஆனால், இதுவெல் லாம் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நடந்துள்ளது” என்று மோடி கூறினார்.


ஆனால், மோடியின் இந்த குற்றச்சாட்டை தவறானது என்று ஐஎன்எஸ் விராத் கப்பலின் முன் னாள் துணை அட்மிரல் வினோத் பஸ்ரிசா உட்பட கடற்படை மூத்த அதிகாரிகள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினர்.இதுஒருபுறமிருக்க, மோடி எய்த அம்பு, தற்போது, அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற பாலிவுட் நடிகர் அக்சய் குமாரை, ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலில் பிரதமர் மோடி அனுமதித்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


“கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி, விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேச கடற்படைக் கண்காட்சியில் கனடா குடியுரிமை பெற்ற அக்சய் குமாரை, ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலில் ஏற்றியது, எந்தவகை தேசப் பாதுகாப்பு?” என்று பாதுகாப்புத்துறை ஆர்வலர்கள் கேட்டுள்ளனர்.கடந்த 2012-ஆம் ஆண்டே, அக்சய் குமார், கனடா நாட்டின் குடியுரிமையை எவ்வித சிரமுமின்றிபெற்றிருந்தார். ஊடகங்களும் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தன. அப்படியிருந்தும் அக்சய்குமார், இந்தியாவின் போர்க்கப்பலில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். 


அதுமட்டுமல்ல, இதுவரை பத்திரிகையாளர்களை நேரில் சந்திக் காத பிரதமர் மோடி, கனடா குடியுரிமை பெற்ற அக்சய் குமாரைஅழைத்துத்தான், அண்மையில் நீண்ட பேட்டி அளித்தார். இவையெல்லாம் தேசப் பாதுகாப்பு பிரச்சனையில் வராதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.