tamilnadu

img

கனடாவில் 1,500 வகையான தாக்குதல் துப்பாக்கிகளுக்குத் தடை

ஒட்டாவா
ஏப்ரல் 20-ஆம் தேதி கனடா நாட்டின் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் கேப்ரியல் வோர்ட்மேன் (51) என்ற நபர் போலீஸ் உடையில் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் பெண் போலீஸ் அதிகாரி உள்பட 26 பேர் பலியானார்கள். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் கனடா கடும் சோகத்தில் மூழ்கியது. அமெரிக்கா போன்று அல்லாமல் கனடாவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறைவு என்பதால் அந்நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான தாக்குதலாகக் கருதப்பட்டது. 

இந்நிலையில் நோவா ஸ்காட்டியா துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் எதிரொலியாக 1,500 வகையான தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்குத் தடை விதிப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். 

கனடாவில் கொரோனா எப்படி?
வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள முக்கிய வளமிக்க நாடான கனடாவில் கொரோனா பரவல் தற்பொழுது மிதமான வேகத்தில் உள்ளது. இதுவரை அங்கு 56 ஆயிரத்துக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். 3500 பேர் பலியாகியுள்ளனர்.