புதுதில்லி:
குடியுரிமைச் சட்டத்திற்கு, மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த, பாஜக எம்எல்ஏ நாராயண் திரிபாதி, திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குடியுரிமைச் சட்டம், மதத்தின் பெயரால் நாட்டைப்பிளவுபடுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாராயண் திரிபாதி மேலும்கூறியிருப்பதாவது:
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) வாக்குஅரசியலுக்கு வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம். ஆனால், நாட்டுக்கு நல்லதல்ல. எனது மனச்சாட்சி சிஏஏ-வை எதிர்க்கிறது. சிஏஏ நாட்டின் சகோதரத்துவத்திற்கும், அமைதிக்கும் தடையாக உள்ளது. மக்கள் ஒருவரைஒருவர் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மதச்சார்பற்ற தேசத்தில் மதத்தின் அடிப்படையில் எந்தப் பிரிவினையும் இருக்காது என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள் ளது. ஆனால், இப்போது மத அடிப்படையில் பிரிவினை செய்யப்படுகிறது.
பாபா சாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பை நாம் பின்பற்ற வேண்டுமா, மதிக்க வேண்டுமா அல்லது அதைக் கிழிக்க வேண்டுமா? என்று கேட்க விரும்புகிறேன். பூமி முழுவதும் ஒரே குடும்பம் என்று பேசுகிறோம். அப்படியிருக்க, மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தினால், இந்த நாடுஎப்படி இயங்கும்.?நான் ஒரு கிராமத்திலிருந்து வந்தவன்.இன்றைய தினம், ஆதார் அட்டைகளைப் பெறுவது கூட எளிதல்ல. அதனைப் பெறுவதற்கே மக்கள் ஏராளமான ஆவணங்களை எடுத்துக்கொண்டு அலைகின்றனர். அதிகாரிகளை பார்ப்பதற்காக பல நாட்கள் காத்திருக் கின்றனர்.
எனவே, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல விரும்பினால், சிஏஏ செயல்படுத்தப் படக்கூடாது. இன்றைய தினம், நாம் பேச வேண்டியது, வேலையின்மை பற்றித்தானே தவிர, மதத்துடன் இணைக்கப்பட்ட குடியுரிமையைப் பற்றியல்ல.இவ்வாறு நாராயண் திரிபாதி கூறியுள்ளார்.பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டாஉட்பட அனைத்து பாஜகவினரும் குடியுரிமைச்சட்டத்தை ஆதரித்தும், அதனை விளக்கியும் பிரச்சாரம் நடத்திவரும் நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏ ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது,பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2014-இல் பாஜக-வில் சேருவதற்கு முன்புகாங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருந்த திரிபாதி,தேன்பொறி வழக்கில் போலீஸ் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.