பத்திரிக்கையாளர் ரவிநாயர்
அனேகமாக 2024க்கு முன்பே இந்தியா “ஆத்மநிர்பார்” (சுயச்சார்பு) என்பது “அதானிநிர்பார்” (அதானி சார்பு)“அம்பானிநிர்பார்” (அம்பானி சார்பு) என்று ஆகிவிடும்.
**************
காஷ்மீர் பத்திரிகையாளர் ஆரிஃப் ஷா:
ஷியா பிரிவை சேர்ந்த ஒரு காஷ்மீர் முஸ்லிம் இளைஞர் முகரம் ஊர்வலத்தின் பொழுது பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட காட்சி! இப்படி ஆயிரக்கணக்கானோர், குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டுள்ளனர்; கண்பார்வை இழந்துள்ளனர்.
**************
பத்திரிகையாளர் விக்னேஷ் ராதாகிருஷ்ணன்:
இந்தியாவில் முதல் 10 இலட்சம் தொற்றில் 40% கிராமப்புறங்களில் இருந்தது. ஆனால் கடைசி 10 லட்சத்தில் 67% கிராமப்புறங்களில்! முதல் 10 இலட்சம் தொற்று 169 நாட்களில் உருவானது. கடைசி 10 இலட்சம் வெறும் 16 நாட்களில் ஏற்பட்டுள்ளது. (இது அமெரிக்க பிரேசிலைவிட அதிக வேகம்!)
**************
பத்திரிகையாளர் நசீர்கனி:
2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி நாடாளுமன்றத்தில் லடாக் பா.ஜ.க.உறுப்பினர் 370வது பிரிவை நீக்கியதை ஆதரித்து வலுவாக பேசினார். இப்பொழுது 03.09.2020 அன்று லடாக் சுயாட்சி கவுன்சில் 371வது பிரிவு தேவை என தீர்மானம் இயற்றியதை வரவேற்கிறார். (370வது பிரிவில் உள்ள பல அம்சங்கள் 371வது பிரிவிலும் உள்ளன)
**************
அரசு ஆதரவு நீதிபதி அருண் மிஸ்ரா பணி ஓய்வு குறித்து நீதிபதி ரேகா சர்மா:
குட்பை நீதிபதி மிஸ்ரா! தேவைக்கும் அதிகமாகவே நீங்கள் நீதிபதியாக இருந்துவிட்டீர்கள். ஆலிவர் கிராம்வெல் வார்த்தைகளில் கூறுவதானால் “நாங்கள் உங்களோடு மாரடிப்பது முடிந்துவிட்டது”.
**************
மார்க்சிஸ்ட் கட்சி/ பாண்டிசேரி:
பாசிசம் ஒரு வலதுசாரி அதீத தேசிய வெறி கொண்ட, புறநிலையை மறுக்குகிற - அகநிலை தத்துவம். நடைமுறையில் நாசிசத்தை அமலாக்குகிறது. முதலாளித்துவ அரசாங்கத்தின் கடைந்தெடுத்த மிகவும் பிற்போக்குத்தனமான வடிவத்துடன் தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறது பாசிசம்!
**************
டுவிட்டரில் சீத்தாராம் யெச்சூரி:
மூழ்கும் கப்பலில் உச்சியில் உட்கார்ந்து கொண்டு “நாம் மேலே போகிறோம்” என சொல்வது போல உள்ளது இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் உள்ளது எனும் ஆள்வோரின் கூற்று. உண்மையை மறுக்கும் பைத்தியக்காரத்தனம்! கோடிக்கணக்கான மக்கள் வறுமை/ துயரம்/ கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குள் தள்ளப்படுகின்றனர். மிகப்பெரிய அளவுக்கு பொது முதலீடுகள்/ உள்கட்sடமைப்புகள் விரிவாக்கம்/ வேலை வாய்ப்புகள் பெருக்கம் – இதுதான் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலும்.
**************
ச.தமிழ்ச்செல்வன்... நாமக்கல் தோழர் பழனிச்சாமி-100
தமுஎசவைத் துவக்கிய முன்னோடிகளில் ஒருவரான தோழர் கு.சின்னப்பபாரதியை இடது பக்கம் திரும்ப வைத்த மூத்த தோழர் பழனிச்சாமி 99 வயதைக் கடந்து, சென்றவாரம் 100 வயதைத் தொட்டார்.சிறந்த மொழிபெயர்ப்பாளர்.கூகி வான் தியான்கோவின் கறுப்பின மந்திரவாதி நூலின் சுருக்கத்தை மொழிபெயர்த்தவர்.1948 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தோழர் பி.டி.ரணதிவே இருந்தபோது ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்துவோம் என்கிற முழக்கம் எழுந்தபோது,தோழர் பழனிச்சாமி நாமக்கல்லில் தோழர்களைத் திரட்டிச்சென்று காவல் நிலையத்தைத் தாக்கிச் சிதறடித்தார்.புகழ்பெற்ற - நாமக்கல் காவல்நிலையத் தாக்குதல் வழக்காக அது பல ஆண்டுகள் நடைபெற்றது.
பல மலரும் புரட்சிகர நினைவுகளோடு இன்றும் தீக்கதிர் வாசித்து விவாதிக்கிறவராக இருக்கிறார்.தமுஎகச மாநிலப் பொறுப்பாளர்கள், இ பாஸ் ரத்தானதும், நாமக்கல் சென்று தோழர் சின்னப்ப பாரதி அவர்களையும் சந்தித்துவிட்டு தோழர் பழனிச்சாமிக்கு நூற்றாண்டு வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்தோம்.அவருக்கு ரொம்ப உற்சாகம்.எங்களைக் கட்டிக்கொண்டு அன்பு பாராட்டினார்.அதே போல கு.சி.பா. அவர்களும்.....
**************
தாமஸ் ஐசக், கேரள நிதியமைச்சர்:
பஞ்சாப்/ தில்லி/ மேற்கு வங்கம்/ சட்டீஸ்கர்/ தெலுங்கானா/ கேரளா ஆகிய மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மத்திய அரசாங்கத்தின் ஜி.எஸ்.டி. நிலைபாட்டை நிராகரிப்பது என ஏற்றுக்கொண்டுள்ளனர். நமது கோரிக்கை: கடவுளின் செயலோ/ மனிதனின் செயலோ/ இயற்கையின் செயலோ எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்! மத்திய அரசாங்கம் கடன் வாங்கி மாநிலங்களின் இழப்பை ஈடு செய்ய வேண்டும். Cess எனப்படும் சிறப்பு வரியை நீட்டிப்பதன் மூலம் தனது கடனை மத்திய அரசாங்கம் நேர் செய்து கொள்ளலாம்.
**************
பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்
மயிலு, எங்க ஆத்தா வாத்து வளத்தா, நாய் வளத்தா, பொருளாதாரத்தை மட்டும் வளக்கல, அதுக்கு பதிலா பாசிசத்தை வளத்தா ...
**************
பத்திரிகையாளர் சுதிர் சூர்யவன்ஷ்:
மும்பை சர்வதேச விமான நிலையத்தை பல ஆண்டுகளாக ஜி.வி.கே. குழுமம் நடத்தி வருகிறது. அதானி தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள விலை பேசுகிறார். ஜி.விகே.குழுமம் மறுக்கிறது. மத்திய புலனாய்வு அமைப்பு CBI ஜி.விகே.குழுமத்தில் ரெய்டு. அதானியுடன் ஒத்துழைக்கிறோம் என ஜி.வி.கே. குழுமம் அறிக்கை. அடுத்த நாள் அதானி மும்பை விமான நிலையத்தின் 75% பங்குகளை வாங்குகிறார். வாழ்க ஜனநாயகம்!
**************
பூவுலகு சுந்தரராஜன்:
Dislike வாங்குவதில் சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். ‘மன் கி பாத்’ யூடியூப் வீடியோவை இன்றுவரை டிஸ்லைக் செய்தவர்கள் 8 இலட்சத்து 53 ஆயிரம் பேர்...! ஒரு பிரதமர் என்றும் பாராமல்...
**************
ஜோக்கர்:
மக்கள் ~ சாப்பாட்டுக்கே கஷ்டமா இருக்கு ஜி. ஜி ~ அதை விடு.. நாய்லாம் வளர்த்தா எவ்ளோ சந்தோசமா இருக்கலாம் தெரியுமா??!
**************
மார்க்சிஸ்ட் கட்சி/ பாண்டிசேரி:
செப்டம்பர் 3ம் தேதி 1945ம் ஆண்டு “ஆப்பரேஷன் பேப்பர் கிளிப்” எனும் திட்டத்தை அமெரிக்க ஹாரி டூருமன் அங்கீ கரித்தார். இத்திட்டம் மூலம் 1500 நாஜி விஞ்ஞானிகள் மற்றும் போர் குற்றவாளிகள் அமெரிக்கா வந்தனர். அவர்கள் விண்வெளி திட்டம் மட்டுமல்லாது உயிரியல்/ இரசாயன ஆயுதங்களை வடிவமைப்பதில் பங்காற்றினர்.