புதுதில்லி:
அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் கணக்கில் வராத பணம், பெரும்பாலும் 2000 ரூபாய் நோட்டுக்களாகவே இருப்பது அமைச்சர் வெளியிட்ட புள்ளிவிவ ரம் மூலம் வெளிச்சமாகிஇருக்கிறது.உயர்மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று, கடந்த 2016-ஆம்ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதிமோடி அறிவித்தார். பதுக்குவதற்கு உயர்மதிப்புடைய நோட்டுக்கள்தான் வசதி என்பதால், கறுப்புப் பணபேர்வழிகள், தங்களின் பணத்தை500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு களாகவே வைத்திருக்கிறார்கள் என்றும், எனவேதான், உயர் மதிப்பு நோட்டுக்களை செல்லாமல்ஆக்கினேன் என்று மோடி கூறி னார். இவ்வாறு கூறிவிட்டு, அடுத்தசில நாட்களிலேயே மிக அதிகபட்ச மதிப்புடைய 2000 ரூபாய்நோட்டுக்களை மோடி அறிமுகப்படுத்தினார். இது அப்போதே கேள்விகளை எழுப்பியது. பதுக்குவதற்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் இன்னும் வசதியாகி விடுமே என்றுசுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், மோடி மவுனமாகி விட்டார்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2 நாட்களுக்கு முன்பு, அதிகாரிகளிடம் பிடிபட்ட கணக்கில் வராத பணம் குறித்த புள்ளிவிவரங்களை அளித்துள்ளார். அதில், பதுக்கப்படும் பணம் பெரும்பாலும் 2000ரூபாய் நோட்டுக்களாகவே இருப்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது, 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 2017-18இல் பிடிபட்ட கணக்கில் வராத பணத்தில் 67.91 சதவிகிதமும், 2018-19இல் பிடிபட்ட பணத்தில் 65.93 சதவிகிதமும் 2000 ரூபாய் நோட்டுக்கள்தான் என்று தெரிவித்துள்ளார். 2019-20நிதியாண்டிலும்கூட 7 மாதங்களில் மட்டும் 43.21 சதவிகிதப்பணம் 2000 ரூபாய் நோட்டுக்களாகவே இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.