கவுகாத்தி:
வாக்காளர் அடையாள அட்டையை, குடியுரிமைக்கான ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று அசாம் மாநிலத்தின் கவுகாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி பட்டியல்) கொண்டுவரப்பட்டு, 19 லட்சம் பேர் இந்திய குடியுரிமை அற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். 13 லட்சம் இந்துக் களும், 6 லட்சம் இஸ்லாமியர்களும் குடியுரிமையை இழந்துள்ளனர். இவர்கள் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க தீர்ப்பாயங்களிலும், நீதிமன்றங்களிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில், முனீந்திர பிஸ்வாஸ் என்பவர் அசாம் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “தான் பிறப்பால் இந்தியர்” என்றும், “டின்சுகியா மாவட் டத்தின் மார்கெரிட்டா நகரம்தான் தனது நிரந்தர முகவரி” என்றும் கூறியிருந்தார். 1997-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெற்றுள்ளதையும் சான்றாக சமர்ப் பித்திருந்தார்.
மேலும், “எனது தாத்தா மேற்குவங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். தந்தை 1965-இல் அசாமிற்கு குடிபெயர்ந்தார். 1970-இல்டின்சுகியாவின் எனது தந்தை பெயரில் வாங்கப்பட்ட நிலத்திற்கான பத்திரமும் உள்ளது” என்று கூறியிருந் தார்.ஆனால், நீதிபதிகள் மனோஜித் பூயான், பார்த்திவ் ஜோதி சாய்கியாஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வானது, “முனீந்திர பிஸ்வாஸ்1997-க்கு முந்தைய வாக்காளர் பட்டியல் எதையும் சமர்ப்பிக்கவில்லை என்பதுடன், ஜனவரி 1, 1966-க்குமுன்னர் தனது பெற்றோர் அசாமில்நுழைந்ததை நிரூபிக்கத் தவறிவிட்டார்” என்று கூறி, அவரது மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.அத்துடன் வாக்காளர் அடையாள அட்டையை, இந்திய குடியுரிமைக்கான ஆவணமாக கருத முடியாது என்றும் கூறியுள்ளது. இது முனீந்திர பிஸ்வாஸை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.