சென்னை:
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக நமக்கு சாதகமாக இருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் குறித்து கேள்விஎழுப்பிய எதிரக்கட்சி துணை தலைவர் துரைமுருகன், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கானஅனைத்து பணிகளையும் செய்து வருவதாகவும் நிதி ஒதுக்கி விட்டதாகவும் பிரதமரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருப்பதால் நமக்கு பாதகம் ஏற்படலாம் என்ற அச்சத்தையும் வெளிப் படுத்தினார். இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் எடப்பாடி, “உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. நமக்கு வழங்கப்பட வேண்டிய நீர் முழுமையாக வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, இந்த நீரை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெளிவான தீர்ப்பு வழங்கப் பட்டு இருக்கிறது என்பது எதிர்க்கட்சி துணை தலைவருக்கு நன்றாகத் தெரியும்.இது குறித்து மூன்று, நான்கு முறை மேலாண்மை ஆணையத்திடம் அவர்கள் கொண்டு வந்தார்கள். நாம் கடுமையான ஆட்சேபணை செய்த நிலையில், அதிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த வழக்கும் உச்ச நீதிமன்றத்திலே இருக்கிறது. ஆகவே, அவர்கள் எந்த வகையிலும் மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக் காது என்று திட்டவட்டமாக கூறினார்.நமது உரிமையை நிலைநாட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக நமக்கு சாதகமாக இருக்கிறது” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.