புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ்தொற்றால் பாதிக்கப் படுவோரின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சுவாசக் கவசங்கள் (Mask),கிருமி நாசினிகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்த தேவையின் காரணமாக அவற்றின் விலையும் உயரத் துவங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சனையிலும், அரசியல் லாபம் தேடும் முயற்சியில் இறங்கி மேற்குவங்க பாஜகவினர் அசிங்கப்பட்டுள்ளனர். மேற்குவங்க மக்களுக்கு இலவசமாக ‘மாஸ்க்’ வழங்குகிறோம் என்று அறிவித்த பாஜகவினர், வெறும் துணியை ‘மாஸ்க்’ என்று கூறி மக்களிடம் விநியோகித்துள்ளனர். பாஜகவினர் வழங்கும் மாஸ்க்குகளால் ஒரு பயனும் இல்லை. அவற்றால் கொரோனா வைரஸ் பரவலை ஒரு சதவிகிதம் கூடதடுக்க முடியாது. எனினும், அரசியல் லாபம் பார்க்கும் முயற்சியில், இப்படி வெறும் துணியைக் கொடுத்துள்ளனர்.அதுமட்டுமன்றி, அந்த துணியில், தாமரைச் சின்னத்தையும், பாஜக கட்சி மற்றும் மோடியின் பெயரையும் அச்சிட்டுள்ளனர். மேற்குவங்க பாஜகவினரில் இந்த கேவலமான செயல்,மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.