புதுதில்லி:
மக்களவைத் தேர்தலுக்குப் பின், பாஜக அல்லாத அரசியல் கூட்டணியே மத்தியில் ஆட்சியமைக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார். தேர்தல் முடிவில், பாஜக-வுக்கு 100 முதல் 120 இடங்கள் வரை பற்றாக்குறை ஏற்படும் என்றும், அதை அந்த கட்சியால் ஈடுசெய்ய முடியாது என்றும் சிங்வி தெரிவித்துள்ளார்.
மத்தியில் இந்தமுறை தொங்கு நாடாளுமன்றமெல்லாம் அமையாது. பாஜக அல்லாத அரசியல் கூட்டணிக்கு நிச்சயமாக பெரும்பான்மை கிடைக்கும். ஒரே கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று சொல்வது கடினம்தான். அதேசயமம், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.என்றும் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.