politics

img

உபதேசம் செய்பவர்கள் தேர்தல் வேலை பார்க்க வரலாம்..... குடைச்சல் கொடுக்கும் காங். மூத்தத் தலைவர்களுக்கு அபிஷேக் சிங்வி பதிலடி....

புதுதில்லி:
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை தேவை என அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் 23 பேர் திடீரென கிளம்பி, சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். யாரும் எதிர்பாராத வகையில், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல் போன்ற முக்கியத் தலைவர்களே இவ்வாறு கிளம்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இவர்கள் அனைவரும் மறைமுகமாக பாஜக ஆதரவு நிலையெடுத்துத்தான் இவ்வாறு சொந்தக் கட்சிக்கு உள்ளேயே கலகம் செய்வதாக சந்தேகங்களும் எழுந்தன. எனினும், காங்கிரஸ் தலைமை இவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அவர்களும் காங்கிரஸ் கட்சி மீது அக்கறை இருப்பதுபோல காட்டிக்கொண்டு, தொடர்ந்து கட்சியை விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில், குலாம் நபி ஆசாத் பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டி இருப்பதும், குலாம் நபி ஆசாத்தை மீண்டும் எம்.பி. ஆக்காமல் விட்டது காங்கிரசின் தவறு என்று கபில் சிபல் பேசியிருப்பதும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குலாம் நபி ஆசாத்தின் அறக்கட்டளை சார்பில் ஜம்மு-வில் நடக்கும்சாந்தி சம்மேளனம் நிகழ்ச்சியில்தான் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் அனைவரும் மீண்டும் பங்கேற்றுப் பேசியுள்ளனர்.ஆனந்த் சர்மா பேசுகையில் “கட்சியின் நலனுக்காகவே நாங்கள் குரல் கொடுக்கிறோம். அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் வலுப்பட வேண்டும். புதிய தலைமுறையினர் கட்சிக்குள் வர வேண்டும். இனிமேலும் கட்சி பலவீனமடையக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.“காங்கிரஸ் கட்சி உண்மையில் பலவீனமடைந்து விட்டது. அதற்காகத்தான் நாங்கள் இங்குக் கூடியுள்ளோம், கட்சியை வலுப்படுத்தக்கூடியுள்ளோம்” என கபில் சிபல் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இந்த 3 அதிருப்தி தலைவர்களின் பேச்சுக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் சிங்வி பதிலடி கொடுத்துள்ளார்.“அதிருப்தி தலைவர்கள் அனைவரும் சேர்ந்து 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெல்வதற்கு உதவி செய்தால் அது சிறப்பாக இருக்கும்” என்று தேர்தலில் கட்சிபெற ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாதவர்கள், வெற்று உபதேசம் செய்வீர்களா? என்று சாடியுள்ளார்.குலாம் நபி ஆசாத்தை முறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்துள்ள அபிஷேக் சிங்வி, “ஒரு தலைவர், (குலாம் நபி ஆசாத்) காங்கிரஸ் கட்சி தன்னை பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். தன்னை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொண்டதாகக் கூறிய அந்த தலைவரைத்தான், காங்கிரஸ் கட்சி 7 முறை எம்.பி. ஆக்கியது. அந்த மூத்த தலைவரைச் சோனியா காந்தி முதல்வராகவும் ஆக்கினார். இந்திரா காந்தி தனது அமைச்சரவையில் அவருக்கு இடம் கொடுத்தார். கட்சியில் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. நாடு முழுவதும் 20 மாநிலங்களைக் கண்காணிக்கும் பதவி வழங்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.