tamilnadu

img

பிசிசிஐ கடனை மட்டும் அடைக்க அமித் ஷா மகன் ஜெய் ஷா மிரட்டினாரா?

கேரளாவைச் சேர்ந்த பைஜூ ரவீந்திரன் கடந்த 2011இல் கர்நாடகா வின் பெங்களூருவை தலைமை யிடமாக கொண்டு பைஜூ’ஸ் (BYJU’S) என்ற பெயரில் ஆன் லைன் கல்வி நிறுவனத்தை தொ டங்கினார். இந்த பைஜூ’ஸ் ஆப் மூலம் எல்கேஜி முதல் இந்திய ஆட்சிப் பணிக்கான பாடங்கள் வரை ஆன்லைனிலேயே கற்க லாம். கொரோனா ஊரடங்கு காலத் தில் பைஜூ’ஸ் நிறுவனம் நாட்டின் பிரபல கல்வி நிறுவனமாக உரு வெடுத்தது. 

மேலும் இந்தியா மட்டுமின்றி 21 நாடுகளிலும் தனது ஆன்லைன்  கல்வி முறையை விரிவுபடுத்திய நிலையில், 2011 முதல் 2023 வரை  ரூ.28,000 கோடி மதிப்பில் அந்நிய முதலீட்டை பெற்றதாகக் கூறப்படு கிறது. மேலும் 2019இல் பைஜூ’ஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசி சிஐ) ஸ்பான்சராகவும் ஒப்பந்தம் செய்து வளர்ச்சியின் உச்சத்திற்கு சென்றது. 

இந்நிலையில், சமீபத்தில் அந்நிய முதலீடு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கியது. தொடர் குற்றச்சாட்டுகள் காரண மாக முதலீட்டாளர்கள் பின்வாங்கி னர். இதனால் பைஜூ’ஸ் ரூ.15,000 கடனில் சிக்கி திவாலானது. மேலும் பிசிசிஐ ஸ்பான்சர் விவகாரத்தி லும் பாக்கி வைத்தது. இதனை தொடர்ந்து திவால் நடவடிக்கைக ளைக் கையாளும் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி - NCLAT) ஒரு தலைபட்சமாக செயல்பட்டு, ஆகஸ்ட் 2 அன்று பிசிசிஐ-க்கு செலுத்த வேண்டிய ரூ.158.9 கோடியை  உடனடியாக செலுத்த உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து  பைஜூ’ஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்த “கிளாஸ் டிரஸ்ட்” என்ற அமெரிக்க நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு இரு தரப்பு வாதத்திற்குப் பின், “பைஜூ’ஸ் நிறுவனத்துக்கு ரூ.15,000 கோடி கடன் உள்ளது. ஆனால் பிசிசிஐ-க்கு மட்டும் கடனை செலுத்த உத்தரவிட்டது ஏன்? என்சிஎல்ஏடி உத்தரவில் பல்வேறு குறைபாடு உள்ளது. தீர்ப்பாயம் அறிவுக்கூர்மையாக சிந்திக்கவில்லை. அதனால் தான் ரூ.15,000 கோடி கடன் இருக்கும் போது ஒரு தரப்பினரின் கடனை மட்டும் செலுத்த உத்தரவிடப் பட்டுள்ளது. கடனின் அளவைக் கருத்தில் கொண்டு, ஒரு நிறுவன உரிமையாளர் தங்களுக்குச் செலுத்தத் தயாராக இருப்பதாகக் கடன் வழங்குபவர் (பிசிசிஐ) வில கிச் செல்ல முடியுமா? இது தவறா னது. அதனால் பைஜூ’ஸிடம் இருந்து பெறப்பட்ட தொகையை பிசிசிஐ தனி வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை மீண்டும் என்சி எல்ஏடி தீர்ப்பாயம் விசாரிக்க வும் உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.  

ஜெய் ஷா  மேல் வலுக்கும் சந்தேகம்

என்சிஎல்ஏடியின் பாரபட்ச உத்தரவு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகனும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா மீது சந்தேகம் வலுக் கிறது. ஜெய் ஷாவின் மிரட்டல் அல்லது நெருக்கடியால் தான் என்சிஎல்ஏடி ரூ.158.9 கோடி பாக்கியை உடனடியாக கொடுக்க பைஜூ’ஸ் நிறுவனத்திற்கு உத்தர விட்டு இருக்கலாம் என சட்ட வல்லுநர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர்.