புதுதில்லி:
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு 30 உயர் அதிகாரிகளை நியமித்துள்ளது.இணைச் செயலர் அந்தஸ்து கொண்ட இந்த உயரதிகாரிகள் மாநில அரசுகளுக்கு நோய் எதிர்ப்புக்கான போராட்டத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவார்கள் . இந்தியாவில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து 137 பேர் சிகிச்சை பெற்று வருவதாக உறுதிசெய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.