புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம், தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. புதுவை மாநிலத்தில் 92.94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் தனியர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மொத்தம் 14,694 பேர் (7,786 பேர் மாணவிகள் மற்றும் 6,908 பேர் மாணவர்கள்) இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் 6,431 பேர் (3,754 பேர் மாணவிகள் மற்றும் 2,677 பேர் மாணவர்கள்) மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 8,263 பேர் (4,032 பேர் மாணவிகள் மற்றும் 4,231 பேர் மாணவர்கள்) தேர்வு எழுதினர்.
இத்தேர்வில், 13,657 பேர் (7,421 பேர் மாணவிகள் மற்றும் 6,236 பேர் மாணவர்கள்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் 5,506 பேர் (3,415 பேர் மாணவிகள் மற்றும் 2,091 பேர் மாணவர்கள்) மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 8,151 பேர் (4,006 பேர் மாணவிகள் மற்றும் 4,145 பேர் மாணவர்கள்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் 85.62 சதவீதமும், தனியார் பள்ளி மாணவர்கள் 98.64 சதவீதமாக மொத்தம் 92.94 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.62 சதவீதம் அதிகம் ஆகும்.
புதுச்சேரி பகுதியில் மட்டும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.80 ஆகும். இது கடந்த ஆண்டை விட 5.71 சதவீதம் அதிகம். இதில், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.30 ஆகும். இது கடந்த ஆண்டை விட 12.84 சதவீதம் அதிகம் ஆகும்.
இதேபோல், காரைக்கால் பகுதியில் 88.16 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.13 சதவீதம் அதிகம் ஆகும். இதில், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 84.14 ஆகும். இது கடந்த ஆண்டை விட 8.25 சதவீதம் அதிகம் ஆகும்.