தில்லி
ஆசியாவின் கொரோனா மையமாக இருந்த இந்தியா,தற்போது வேறு வழியில் பயணித்து வருகிறது. காரணம் உலகின் கொரோனா பாதிப்பு அட்டவணையில் முதலிரண்டு இடங்களில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை பின்னுக்குத்தள்ளும் அளவிற்கு இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 69,196 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் மொத்த பாதிப்பு 28.35 லட்சமாக உயர்ந்துள்ளது.மேலும் 980 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,994 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருந்த 59 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20.96 லட்சமாக உள்ளது. இன்னும் 6.85 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவும் வேகத்தை பார்த்தால் விரைவில் உலகின் கொரோனா பட்டியலில் 2-ஆம் இடத்தில் உள்ள பிரேசிலை பின்னுக்குத்தள்ளி அந்த இடத்தில் இந்தியா அமரும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.