புதுதில்லி:
இந்தியாவில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் தற்போது வரை கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 3 லட்சம் அதிகரித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கண்டறிய நாடு முழுவதுமுள்ள 940 அரசு மையங்கள் மற்றும் 462 தனியார் மையங்கள் உள்பட 1,402 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 713 மையங்கள் ரேபிட் டெஸ்ட் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.நாட்டில் மகாராஷ்டிரா மாநிலம் அதிக அளவாக 4 லட்சத்து 90 ஆயிரத்து 262 பாதிப்புகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மொத்தபாதிப்பு 2 லட்சத்து 85 ஆயிரத்து 025 பேராக உள்ளது.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொரோனா பாதிப்புகள் 18 லட்சம் என்ற அளவை கடந்திருந்தது. அதற்கடுத்த இரண்டு நாட்களுக்குள் 19 லட்சம் என்ற எண்ணிக்கையை அடைந்தது. இதனை தொடர்ந்து, கடந்த 7 ஆம் தேதி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு 20 லட்சம் என்ற எண்ணிக்கையை அடைந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.இந்நிலையில் தற்போது மொத்தபாதிப்பு 21 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. கடந்த 6 நாட்களில்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சம் அதிகரித்துள் ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.