புதுச்சேரி:
புதுவையில் மேலும் 21 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக ஆட்சியர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.பெரிய காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை, ஜோதி வள்ளலார் சாலை, 2.லாஸ்பேட்டை கென்னடி நகர் முதல் குறுக்குத்தெரு, 3.ஆனந்தா நகர் அன்னை வீதி, 4.குண்டுப் பாளையம் மாரியம்மன் கோவில் வீதி, 5.சண்முகாபுரம் வி.வி.சிங் நகர் திரு.வி.க. நகர், 6.மூலக்குளம் சாலைவீதி, 7.பிள்ளைச் சாவடி ஆசிரியர் வீதி, 8. எல்லைப் பிள்ளைச்சாவடி ரத்னா நகர் 4-வது குறுக்குத்தெரு, 9. பூமியான்பேட்டைஜவகர் நகர் எச் பிளாக், 10.ஜவகர் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு எம் பிளாக், 11.லாஸ்பேட்டை சாந்தி நகர் விநாயகர் கோவில் வீதி, 12.கிருஷ்ணா நகர் ஜெனோ பிளாசம் அப்பார்ட்மென்ட் பி கிராஸ், 13.நேருவில் நகர் தில்லை நடராஜன் வீதி, 14.திலாசுப்பேட்டை சத்தியமூர்த்தி நகர், 15.சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பு இ பிளாக்,16.தர்மாபுரி கோவில் மணியம் வீதி, 17.சண்முகாபுரம் வி.வி.சிங் நகர் காமராஜர் வீதி, 18.தர்மாபுரி கங்கையம்மன் கோவில் வீதி, 19.தட்டாஞ்சாவடிபிரியதர்ஷினி நகர் 2-வது முதன்மை சாலை முதல் குறுக்குத்தெரு, 20.கதிர்காமம் கல்யாணசுந்தரம் நகர், 21.கதிர்காமம் சுப்ரமணியர் கோவில் வீதி ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.