புதுதில்லி:
பயணிகளுக்கு உலகத்தரமான சேவை கிடைக் கச் செய்யப் போகிறோம் என்ற பெயரில், ரயில்வே துறையை தனியார்மயமாக்க மோடி அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. நூறு நாட்களுக்குள் இதற்கான பூர்வாங்க வேலைகளைச் செய்து முடிப்பது என்று இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது.அந்த வகையில், தனியார்மயத்திற்கு முன்னோட்டமாக, அகமதாபாத் - மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ், தில்லி- லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ்ஆகிய 2 ரயில்களை, இந்தியரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்திடம் (ஐ.ஆர்.சி.டி.சி.) சோதனை அடிப்படையில் ஒப்படைக்க, மோடி அரசு முடிவு செய்துள்ளது.அதாவது, ரயில்கள் இரண்டையும் இந்திய ரயில்வே-க்குப் பதிலாக,இனி ஐ..ஆர்.சி.டி.சி. நிறுவனமே 3 ஆண்டுகளுக்கு இயக்கும். தேவைக்கு ஏற்பகட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளும். பயணிகளுக்கு எவ்வித சலுகைகளோ, பாஸ்களோ இருக் காது. ரயில்வே ஊழியர்கள், டிக்கெட் பரிசோதனை நடத்த மாட்டார்கள்.ரயில்வேயின் என்ஜின் டிரைவர்கள், கார்டுகள், நிலைய மேலாளர்கள் ஆகியோர் மட்டும் இப்போதுபோலவே பணிபுரிவார்கள்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.